Saturday, February 20, 2016

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்க, வந்த பின்னும் புற்று செல்களை அழிக்கவல்ல உணவு வகைகளைத் தெரிந்துகொள்வதுடன், தினசரி உணவில் அதை வாடிக்கை யாக்குவதும் அவசியம்.
 திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள். 
 தக்காளியில் உள்ள விட்டமின் `சி' ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
 புரொக்கோலி, மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துணவு. புரொக்கோலியில் உள்ள ‘இன்டோல் 3-கார்பினோல்’, பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
 பூண்டு... குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 தினமும் கேரட் எடுத்துக் கொண்டால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படு வதைத் தவிர்க்கலாம்.
 காளான், உடலில் உள்ள செல்களை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.
 புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி அளிப்பதில், நட்ஸ் மிகச் சிறந்த உணவு. இவற்றில் உள்ள க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.
 பப்பாளியை தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் வரும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வலு தரும். தொடர்ந்து சாப்பிடும்போது, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி  வெளியேற்றும். 
 ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும் இது ஆல்கஹால் என்பதால் அளவாகப் பருகவில்லை எனில் எதிர்விளைவுகள் ஏற்படும்.

No comments:

Post a Comment