Friday, September 18, 2015

சாப்பிட்ட பின் எப்போது தண்ணீர் குடிக்கலாம்

சாப்பிட்ட பின் எப்போது தண்ணீர் குடிக்கலாம்

சிறுநீரையும், மலத்தையும் அடக்கக் கூடாது சிறுநீர் 4 மணி நேரத்திற்கு ஒருமுறையும், மலம் காலை மாலை இருவேளையும் கழிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கும் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் காலங்களில் 2 லிட்டராவது குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் அவசியமின்றிக் குடிக்கக் கூடாது. 

சாப்பிட்ட பின் குறைவாகக் குடிக்க வேண்டும். சாப்பிட்டு 1 மணி நேரத்திற்குப் பின் தேவையான அளவு தேவையான நேரத்தில் குடிக்க வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடக் கூடாது குறிப்பாகக் பாக்கெட்டில் அடைத்த பதப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். உடல் பருமனுக்கும் பல்வேறு நோய்களுக்கும் அதுவே காரணம். கருவுற்ற பெண்கள், பாலூட்டும் பெண்கள் நொறுக்குத் தீனியை அறவே (சாப்பிடக் கூடாது) தவிர்க்க வேண்டும். 

வாய் ருசிக்காக வீட்டில் செய்யும் நொறுக்குத் தீனிகளைக் குறைவாகச் சாப்பிடலாம். அதிலும் உப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பர். அது நல்லதல்ல. நாம் உணவு உண்ணத் தொடங்கியதுமே, செரிமானத்திற்குரிய சுரப்பிகள் சுரக்கத் தொடங்கும். அப்போது உணவோடு தண்ணீரையும் அருந்தினால், அத்தண்ணீர் செரிமான நீர்களுடன் சேர்ந்து செரிமானத்தைப் பாதிக்கும். 

உண்ணும்போது சில நேரங்களில் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டிவரும். அப்போது, அளவோடு சிறிதளவு தண்ணீர் அருந்த வேண்டும். மற்ற நேரங்களில் தண்ணீர் வேண்டிய அளவு அருந்தலாம். ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்நலம் காக்க இது பெரிதும் உதவும். உடல்நலம் தண்ணீர் குடிப்பதில்தான் அடங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. 

உடலிலுள்ள செல்களுக்கு உயிர்வளியைக் (ஆக்ஸிஜன்) கொண்டு செல்வது தண்ணீர்தான். நம் உடலில் தட்பவெட்ப நிலையைச் சீராக வைக்கத் தண்ணீர் அவசியம். போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் சிறுநீரகம் பாதிக்கப்படும், உடல் முழுவதும் பாதிப்படையும், மூட்டுகள் தேயும், மலச்சிக்கல் ஏற்படும். மூளை செயல்பாட்டிற்கு முதன்மையானது தண்ணீர். தண்ணீர் சரியாகக் குடிக்கவில்லையென்றால் மூளை செயல்பாடு குறையும். தலைவலி, மயக்கம் போன்றவையும் உடல்சோர்வும் ஏற்படும்.

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குமேல் தாத்தாவாகி விடும்போது அனேகமானோர் வீட்டிற்குள்ளேயே அடங்கி விடுகின்றார்கள். 

உடல் உழைப்பு இல்லாமையும், கல்சியம் அடங்கிய உணவுகளை உண்ணாமையினாலும் இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். முதுமை காரணமாக முதியவர்களின் உடல் உறுப்புகளும் முதிர்வால் ஆற்றகையும் இழந்து விடுவதும் முக்கிய காரணமாகும். இந்நோய் சத்து குறைபாட்டினாலும் இளம் வயதில் ஏற்படுகின்றது. 

சூரிய ஒளிபடும்படியான இடங்களில் வசிப்போருக்கு அதிகமாக இந் நோய் தாக்குவதில்லை. சூரிய ஒளியில் விற்றமின் "டி" சக்தியை உடம்பு பெறுவதாலும், கல்சியம் நிறைந்த உணவுகளை உட்கொவதாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படாது தடுத்துக் கொள்ளலாம். வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். 

அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன. வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும் சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளே என்பது உலகம் அறிந்த உண்மை.

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. 

அறிகுறிகள்: குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும். 

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: 

* அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். 

* ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம். 

*  சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம். 

*  கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். 

* வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். 

*  பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம். 

* மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். 

* பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். 

* சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம். 

சேர்க்க வேண்டியவை: 

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. 

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி. 

கடைப்பிடிக்க வேண்டியவை: 

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. 

* உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். 

* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 

* சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

Monday, September 7, 2015

நெஞ்செரிச்சலை குணமாக்கும் உணவுகள்

நெஞ்செரிச்சலை குணமாக்கும் உணவுகள்

நெஞ்செரிச்சல் என்பது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. வேளாவேளைக்கு சாப்பிடாததும் முறையற்ற உணவும் தான் நெஞ்செரிச்சல் ஏற்பட காரணம். சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கிறது. 

அப்படி சரியான உணவை எடுத்துக்கொள்ளாத போது இரைப்பையில் சுரக்கும் அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கும். அப்போது தேங்கி இருக்கும் அமிலமானது வயிற்றெரிச்சலை தோற்றுவிக்கும். இந்த நிலையில் இறுக்கமான உடை அணிந்து இருந்தாலோ அல்லது அதிக காரம் மிகுந்த உணவை சாப்பிடும்போதோ அந்த அமிலமானது உணவுக் குழாய் வழியாக மேலே சென்று, நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை ஒருசில உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும். 

இதுதவிர சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால் சரி செய்யலாம். நெஞ்செரிச்சலை சில பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம். தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். 

இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து நீர்த்துப் போய்விடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். லிகோபாக்டர் பைலோரியா எனும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூசை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும். கடல் உணவுகளில் டாரின் என்ற சத்து அதிகம் உள்ளது. இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை குறைக்கும். 

அதுமட்டுமல்ல, இது கண்களுக்கும் சிறந்தது. வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், எரிச்சலை உண்டாக்கும் அமிலம் சுரப்பதை தடுக்கும். எனவே கால்சியம் உற்பத்திக்கு உதவும் பால் சாப்பிடுவது நல்லது. எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் அதிமதுரம் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கும். இப்படி சில உணவுகள் மூலமும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தலாம்.

பழைய சாதம் சாப்பிட்டால்...பஞ்சாய் பறந்து விடும் நோய்கள்

பழைய சாதம் சாப்பிட்டால்...பஞ்சாய் பறந்து விடும் நோய்கள்

அரிசி இந்தியாவின் அடிப்படை உணவு. ஒரு கைப் பிடி சாதம் உண்டு அதன் மூலமே ஜீவிக்கும் எத்தனையோ வயிறுகள் இந்தியாவில் உள்ளன. ஆக அரிசி உயிர் காக்கும் அமிர்தம். வேத காலத்தில் லட்சம் வகை அரிசிகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இன்றும் சுமார் அரிசியில் 200 வகை பிரிவுகள் இருப்பதாக சொல்கின்றனர். 

எந்த வகை அரிசியும் தோல் நீக்கப்பட்ட நிலையில் பிரவுன் அரிசிதான். இதில் 15 வகை அவசிய சத்துக்கள் உள்ளன. 

* வைட்டமின்கள் பி1, 2, 3, 6, ஈ, கே என இருப்பது இயற்கை நமக்களித்த வரம். எவ்வளவு காசு கொடுத்தாலும் இப்படி கிடைக்காது. 

* நார்சத்து மிக அதிகம் இருப்பதால் இருதய பாதிப்பினை தவிர்க்கின்றது. மலச்சிக்கலை நீக்குகின்றது.

* 88 சதவீத மங்கனீஸ் சத்து உள்ளது. இது உடலுக்கு சக்தியினையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் அளிக்கின்றது. 

* இதில் உள்ள எண்ணெய் சத்து கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு சத்தினை குறைக்கின்றது. 

* 27.3 சதவீத உள்ள செலினியம் குடல் புற்றுநோய் பாதிப்பினை தவிர்க்கின்றது. நீரிழிவு 2 பிரிவினை தவிர்க்கின்றது. 

* நீரிழிவு பாதிப்பு உடையோருக்கு சர்க்கரை அளவை வெகுவாய் கட்டுப்பாட்டில் வைக்கின்றது. 

* மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பிரவுன் அரிசி அவசியமே. 

* இதிலுள்ள நார் சத்து பித்தப்பையில் கற்கள் உண்டாவதை தடுக்கின்றது. 

* பிரவுன் அரிசி சைவ உணவில் சத்துக்கள் நிறைந்த உணவு. 

* தைராய்டு செயல்பாட்டிற்கு உதவுகின்றது. 

* இதிலுள்ள மக்னீசயம் ரத்த ஓட்டத்தினை சீராக்குகின்றது. 

* எலும்புகள் வலுவாகவும் உறுதியாகவும் இருக்கின்றன. 

* திசுக்கள் காக்கப்படுகின்றன. 

* உடல் எடை கூடாது இருக்கின்றது. 

* ஆஸ்த்மா, வலி, வீக்கம், மூட்டு வலி இவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. 

* மார்மக புற்று நோய் தவிர்க்கப்படுகின்றது. 

* தலைமுடி, பல், தசைகளுக்கு சத்து கிடைக்கின்றது.

* நரம்பு மண்டலம் பலப்படுகின்றது. மன நலம் நன்கு காக்கப்படுகின்றது. 

* க்ளூடன் அலர்ஜி உள்ளவர்கள் இதனை நன்கு எடுத்துக் கொள்ளலாம். 

தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் எனும் அமிர்தம் :

பொதுவாக வீட்டில் சாதம் மீந்து விட்டால் இரவில் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை மோர், பச்சை வெங்காயம், மோர் மிளகாய் அல்லது ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவது கிராம புறங்களில் அதிகம் காணப்படும் ஒன்று. நிறைய பேர் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். பலர் பொருளாதார நிலை காரணம் எனக் கூறி உண்பர். வயல் வேலை செய்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக வேண்டி உண்பர். நகர்புறங்களில் நாகரீகம் என்ற பெயரில் பிரட், சீரிவல், இட்லி, தோசை என மாறி விட்டது. 

ஆனால் பலரும் அறியாத ஒரு உண்மை, முதல் நாள் இரவு நீர் ஊற்றிய இந்த சாதம் ஓர் அமிர்தம் என்பது தான். சமைத்த 100 கி. சாதத்தில் 3.4 மிகி அளவே இரும்பு சத்து உள்ளது. இதே சாதம் 12 மணி நேரம் தண்ணீர் ஊறிய பிறகு இரும்பு சத்து சுமார் 72 மிகி வரை அதிகரிக்கின்றது. அதே போல் சமைத்த சாதத்தில் சுமார் 475 மிகி வரை சோடியம் உப்பு உள்ளது. 

அதுவே பழைய சாதத்தில் 303 மிகி என குறைகின்றது. சோடியம் குறைவது உடலுக்கு ஆரோக்கியமானது. பொட்டாசியம் அளவு 840 மிகி வரை உயர்கின்றது. கால்சியம் அளவு சுமார் 20 மிகி-ல் இருந்து 850 மிகி ஆக உயர்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. பழைய சாதம் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. பலரும் இதனை வெயில் காலத்திற்கேற்ற உணவாக உட்கொள்கின்றனர். அமெரிக்க சத்துணவு ஆய்வாளர் இந்த பழைய சாதத்தினைப் பற்றி கூறும் பொழுது கீழ்கண்ட ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டுள்ளார். 

* பழைய சாதம் காலை உணவாக கொள்வது உடலை லேசாகவும் சத்து கொண்டதாகவும் இருக்கச் செய்கின்றது. 

* உடலுக்குத் தேவை யான நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. 

* வயிறு நோய்கள் நீங்குகின்றன. இதிலுள்ள நார்சத்து உடலை சக்தியோடு வைக்கின்றது. 

* மலச்சிக்கல் நீங்குகின்றது. 

* ரத்தக் கொதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது. அதிக சோர்வு தாக்குதல் ஏற்படுவதில்லை. அனைத்து வகை புண்கள் நீங்குகின்றன. அலர்ஜி பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. முதுமை தோற்றம் குறைகின்றது. காபி, டீ என்ற எண்ணம் வெகுவாய் குறைகின்றது. உள் உறுப்புகளின் அதிக வேலை குறைகின்றது. வைட்டமின் பி6, பி12 அதிகமாக கிடைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்த சாதத்தினை மண் சட்டியிலோ அல்லது கல் சட்டிலோ நீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது சிறந்தது என இயற்கை மருத்துவத்திலும், ஆயுர் வேதத்திலும் அறிவுறுத்தப்படுகின்றது.

கண்ணீரால் கரையும் தீமைகள்

கண்ணீரால் கரையும் தீமைகள்

அதிக துக்கமோ, அதிக ஆனந்தமோ எதுவானலும் கண்களில் கண்ணீர் சுரக்கும். பலர் அறிய அழுவதை கவுரவக் குறைச்சலாக சிலர் நினைப்பார்கள். ஆனால் கண்ணீரும் சில தீமைகளை அழிக்கிறது. நன்மைகளை அளிக்கிறது. 

கண்ணீரில் உள்ள லைசோசோம் கண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது இமைகளும் கண்விழிகளும் சுத்தமாவதோடு, பார்வையும் தெளிவாகிறது. துக்கத்தால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால் துக்கம், கவலை எல்லாம் கரைந்து விடுகின்றன. 

மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது. அழுகையானது ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. கண்ணீர் சருமத்தில் படும் போது அதில் உள்ள நச்சுகளை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது. அழுகை வரும் போது அழுதுவிடுவதே நல்லது. ஒருபோதும் அதை அடக்கி வைக்கக்கூடாது. அது மனஅழுத்தத்தைத்தான் ஏற்படுத்தும்.